ரோகித் சர்மாவிற்கு இடமில்லையா? - 5வது டெஸ்டில் நடக்கப்போகும் மாற்றம்
இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 10ம் தேதி தொடங்க உள்ளது.
இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் செப்டம்பர் 10 ஆம் தேதி கடைசி போட்டி தொடங்கவுள்ளது.
மான்செஸ்டரில் நடைபெற உள்ள இந்த போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டி என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை அவர் 5வது டெஸ்டில் விளையாட மாட்டார் என தெரியவந்தால் அவருக்கு பதிலாக இந்திய அணியில் மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷார், அபிமன்யூ ஈஸ்வரன் ஆகிய 3 பேரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.