சென்னை அணியில் விலகும் டூபிளசிஸ் - இடம்பிடிக்க துண்டு போடும் 3 வீரர்கள்

ஐபிஎல் தொடரில் சென்னை அணி வீரர் டூபிளசிஸ் விளையாட மாட்டர் என தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் 2ஆம் பாதி போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.

இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டூபிளசிஸ் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவ்வாறு அவர் தொடரில் இருந்து விலகினால், அந்த இடத்தில் களமிறங்க மூன்று வீரர்களுக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை சென்னை அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்காத ராபின் உத்தப்பா, தமிழகத்தை சேர்ந்த இளம் வீரரான ஜெகதீஷன், டூபிளசிஸியின் இடத்தில் தொடக்க வீரராக முதல் பாதியில் மிடில் ஆர்டரில் களமிறங்கி மாஸ் காட்டிய மொய்ன் அலியை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்