இவர்கள் இந்திய அணியில் இடம்பிடிக்க இனி வாய்ப்பே இல்லை - வெளியான அதிர்ச்சி தகவல்

இந்திய அணியில் கிடைத்த வாய்ப்பை வீணடித்ததால் இனி இந்தியஅணியில் இடம்பிடிக்க 3 வீரர்களுக்கு வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்ற நிலையில், டி20 தொடரை இழந்தது.

இந்த தொடரில் பல வருடமாக தங்களது வாய்ப்புக்காக போராடி வந்த சூர்யகுமார் யாதவ், சந்தீப் வாரியர், கிருஷ்ணப்பா கவுதம், நிதிஷ் ராணா, சேத்தன் சக்காரியா, தேவ்தட் படிக்கல், கெய்க்வாட் போன்ற பல வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஓரிரு வீரர்களை தவிர மற்றவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.

குறிப்பாக தனது முதல் போட்டியிலேயே கிருஷ்ணப்பா கவுதம் விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தாலும், இலங்கை அணியிடம் அவரது பந்துவீச்சு அவ்வளவாக எடுபடவில்லை.

இதேபோல் உள்ளூர் தொடர்களில் நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்டு வந்த சந்தீப் வாரியருக்கு இந்திய அணியில் ஏற்கனவே அதிகமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் இடம் கிடைக்காது என கூறப்படுகிறது.

மேலும் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் போன்ற வீரர்கள் திறம்பட செயல்பட்டு வருவதால் நிதிஷ் ராணாவிற்கு இலங்கை தொடரே முதலும் கடைசியுமாக இருக்கும் என தெரிகிறது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்