மூன்று வீரர்களை கழட்டிவிட தயாராகும் மும்பை அணி - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Rohit Sharma Mumbai Indians IPL 2022
By Petchi Avudaiappan May 31, 2022 08:42 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் தொடரில் சொதப்பியதால் மூன்று வீரர்களை கழட்டிவிட மும்பை அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத்,லக்னோ, ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, மும்பை அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.

இதில் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதின. இப்போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அறிமுகமான தொடரிலேயே கோப்பையை வென்ற அணி என்ற சாதனைப் படைத்தது. 

இந்த தொடரில் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக மும்பை அணி கடைசி இடத்தை பிடித்து மோசமான சாதனை படைத்தது. இதற்கு முக்கிய காரணம் மும்பை அணியின் வீரர்களிடையேயான ஒற்றுமையின்மையே ஆகும். 

இதனிடையே வரும் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எப்படியாவது மீண்டும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக மும்பை அணி தனது அணியில் மூன்று வீரர்களை நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  • 2022 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டைம் மில்ஸ் முதல் ஐந்து போட்டிகளில் பங்கேற்ற நிலையில் இவருடைய பந்துவீச்சு அந்த அளவிற்கு எடுபடவில்லை. மேலும் அடுத்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணியில் சோப்ரா ஆர்ச்சர் இணைய உள்ளதால் இவர் நீக்கப்படுவார் என கூறப்படுகிறது. 
  • நடப்பு தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பேபியன ஆலன் மும்பை அணியில் இடம் பெற்றார். ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய இவர் அதிக ரன்களை வாரி வழங்கியதால் அடுத்தடுத்த போட்டிகளில் ஆடவில்லை. 
  •  2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் பிரபலமான லெக் ஸ்பின்னர் மயங்க் மர்கண்டே 2022 ஐபிஎல் தொடரில் மும்பை அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இவர் சரியாக விளையாடததால் நீக்கப்படுவார் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.