திருப்பதிக்கு சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம் - மூவர் சம்பவ இடத்திலே பலி

Accident Viluppuram
By Karthikraja Sep 29, 2024 02:53 PM GMT
Report

கார் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி பயணம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பேரணி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன்(32), அவரது நண்பர் பூபாலனுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு நள்ளிரவில் தங்களுடைய இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். 

tirupathi

அப்பொழுது சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விளங்கம்பாடி என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் அருகே செல்லும் போது திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி அதிவேகமாக வந்த கார் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியுள்ளது.

மூவர் பலி

அதில் அந்த நபர் தூக்கி வீசப்பட்டத்தில் உயிரிழந்தார். அடுத்ததாக இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஐயப்பன் மற்றும் அவரது நண்பர் பூபாலன் உள்ளிட்டோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் சாலையோர பள்ளத்தில் கவிழுந்த நிலையில் கார் ஓட்டுநர் தப்பிச்சென்றுள்ளார். பயங்கர சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

accident

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மூவரின் உடலையும் மீட்டு பிரத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விபத்து ஏற்படுத்தி தலைமறைவாக உள்ள கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.