விழிபிதுங்கிய சந்திரபாபு நாயுடு..! ஒரே நேரத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் - கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு

Andhra Pradesh Death
By Thahir Jan 02, 2023 04:17 AM GMT
Report

சங்கராந்தி பண்டிகையொட்டி ஆங்கில புத்தாண்டு அன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கு விழாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

ஒரே நேரத்தில் திரண்ட ஆயிரக்கணக்கானோர்

ஆந்திரபிரதேசத்தில் ஜனவரி மாதம் 14-ம் தேதி சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இந்த பண்டிகைக்காக நலத்திட்டம் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி குண்டூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு பங்கேற்று பயனாளர்களுக்கு சங்கராந்தி பண்டிகை தொகுப்பை வழங்கினார்.

இதை தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற்றது. நலத்திட்டங்களை பெறுவதற்காக ஏராளமானோர் திரண்டனர். பொதுக்கூட்டம் நடைபெற்ற முடிந்த நிலையில் அங்கிருந்து சந்திரபாபு நாயுடு புறப்பட்டுச் சென்றார்.

இதை தொடர்ந்து மக்களும் அக்கூட்டத்தில் இருந்து வெளியேற தொடங்கினர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

3 பேர் உயிரிழப்பு 

இதனால் பலருக்கும் மூச்சு திணறல், மயக்கம் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

3 people died in the stampede

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.