இலங்கையில் இருந்து மேலும் 3 பேர் தமிழகம் வருகை..!
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளதால் இலங்கையில் இருந்து மேலும் 3 பேர் தமிழகம் வந்துள்ளனர்.
இலங்கையில் பொருளாதாரம் அதளபாதளத்திற்கு சென்ற நிலையில் மக்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய தினமும் அவதியடைந்து வருகின்றனர்.
இதனால் அவர்கள் தமிழகம் நோக்கி வருகின்றனர்.இந்நிலையில் இலங்கையிலிருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர்.

இலங்கையில் இருந்து இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.