விடை கொடு எங்கள் நாடே : இலங்கையிலிருந்து மேலும் 3 பேர் தமிழகம் வருகை
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால்,அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது,இலங்கை அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி கலைக்க முயன்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில்,கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து மேலும் 3 பேர் கடல் வழியாக தமிழகம் வந்தடைந்துள்ளனர்.
இலங்கையிலிருந்து ஏற்கனவே 10 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் தமிழகம் வந்த நிலையில்,தற்போது இலங்கையிலிருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை உட்பட 3 பேர் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan