கேட்பாரற்ற்று கோயில் வளாகத்தில் கிடந்த 3 மாத குழந்தை - விட்டு சென்ற கொடூர தாய்!

temple 3 moth baby
By Anupriyamkumaresan Jul 21, 2021 07:56 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

ஆரணி அருகே கோயில் வளாகத்தில் பிறந்து 3 மாதஙகளே ஆன குழந்தையை கேட்பாரற்று கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் சின்ன மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள நவகிரக சன்னதி அருகே நேற்று பிற்பகல் பிறந்து 3 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது.

கேட்பாரற்ற்று கோயில் வளாகத்தில் கிடந்த 3 மாத குழந்தை - விட்டு சென்ற கொடூர தாய்! | 3 Month Baby In Temple

நீண்ட நேரமாகியும் குழந்தையை யாரும் எடுக்காததால் அங்குள்ள பக்தர்கள் போலீசாரிடம் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் விசாரணையில், கோவிலுக்கு குழந்தையோடு வந்த மர்மநபர் ஒருவர் குழந்தையை விட்டு சென்றது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி உதவியுடன் குழந்தையை விட்டு சென்ற மர்மநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.