3 மாத பிஞ்சு குழந்தையை துன்புறுத்திய 17 வயது சிறுவன்- அதிர்ச்சி சம்பவம்
உத்திரபிரதேசத்தில் 3 மாதங்களே ஆன பிஞ்சு குழந்தையை வன்கொடுமை செய்த சிறுவனின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வாலா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக 3 மாத பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. தாயாரோ மாடுகளை கட்டி வைப்பதற்காக சென்றுள்ளார்.
இதனை கவனித்து வந்த அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் வீட்டிற்குள் புகுந்து, அந்த 3 மாத பிஞ்சு குழந்தையை வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் வலியில் அந்த குழந்தையோ கதறி கதறி அழுதுள்ளார். வழக்கத்திற்கு மாறாக இருக்கும் அழுகுரலை கேட்டு பதறியடித்த தாய், வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது அந்த சிறுவன் குழந்தையை கையில் வைத்து கொண்டு சமாதானப்படுத்தியுள்ளான்.
பதறியடித்த தாய் ஏன் அழுகிறாள் என கேட்க, குழந்தையை கையில் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். குழந்தையை கையில் வாங்கிய தாய், குழந்தையின் பிறப்புறுப்பில் ரத்தம் கசிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு போலீசிலும் புகார் அளித்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான அந்த சிறுவனை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.