சுற்றுலா வந்த இஸ்ரேல் பெண்கள்.. நள்ளிரவில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை- பின்னணி என்ன ?
நள்ளிரவில் இரு பெண்களை மிரட்டிக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா
கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள புராதனச் சின்னங்களைக் காண வெளிநாட்டுப் பயணிகளும் வந்து செல்வது வழக்கம்.அந்த வகையில் இஸ்ரேலைச் சேர்ந்த 27 வயதான பெண் 2 பேரும் , இந்தியாவைச் சேர்ந்த 2 பெண் உட்பட 5 பேரும் ஏரி பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மர்பநபர்கள் சிலர் இஸ்ரேல் சுற்றுலாப் பயணி உட்பட இரு இளம்பெண்களையும் மிரட்டிக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இஸ்ரேல் பெண்கள்
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சுற்றுலாப் வந்த இஸ்ரேல் இளம் பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.