சென்னையில் பயங்கரம்: உடல்களை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்

Chennai
By Fathima Jan 28, 2026 01:46 PM GMT
Report

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய வழக்கில் பீகாரை சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் மூட்டை

சென்னை அடையாறு இந்திரா நகர் முதல் நிழல் சாலை சந்திப்பில் ரத்த வெள்ளத்தில் மூட்டை ஒன்று கிடந்துள்ளது.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து வந்த அடையாறு காவல்நிலைய அதிகாரிகள் மூட்டையை திறந்து பார்த்த போது துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் கிடந்துள்ளது.

இதனை தொடர்ந்து உடலை கைப்பற்றி உடல் கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் விசாரணையை தொடங்கினர்.

சென்னையில் பயங்கரம்: உடல்களை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம் | 3 Memeber Killed And Bodies Were Dumped In Chennai

விசாரணை தொடங்கியது

சிசிடிவி காட்சிகளை கொண்டு பொலிசார் விசாரணை நடத்தியதில் இறந்த நபர் பீகாரை சேர்ந்த கௌரவ் குமார்(வயது 24) என்பது தெரியவந்தது, அவர் தனது மனைவி புனிதா குமாரி மற்றும் பெண் குழந்தையுடன் தங்கியிருந்து செக்யூரிட்டி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

சந்தேகத்தின் பேரில் ஏழு நபர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் குற்றவாளிகள் எனவும் தெரியவந்தது, வடமாநிலத்தை சேர்ந்த அவர்கள் கௌரவ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்து உடல்களை வேறு வேறு இடங்களில் வீசியதையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

சென்னையில் பயங்கரம்: உடல்களை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம் | 3 Memeber Killed And Bodies Were Dumped In Chennai

திடுக்கிடும் தகவல்

பொலிசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், கௌரவ் குமார் மனைவி வனிதா குமாரியிடம் தகாத முறையில் குற்றவாளிகள் நடந்து கொண்டுள்ளனர்.

இதனை கௌரவ் குமார் தட்டிக்கேட்ட போது கோபத்தில் மொத்த குடும்பத்தினரையும் கொலை செய்து உடலை வீசியுள்ளனர்.

இச்சம்பவம் சென்னையில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.