நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்!
திருப்பூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் சேமலைக் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி . இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி . இந்த தம்பதிகளுக்கு செந்தில்குமார் என்ற மகன் உள்ளார்.இவர் கோவையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் விழா ஒன்றில் பங்கேற்பதற்காகச் சொந்த ஊர் சென்ற செந்தில்குமார் , நேற்று இரவு தனது பெற்றோருடன் வீட்டில் தங்கியுள்ளார் .நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்துள்ளனர். இதனைக் கண்ட தெய்வசிகாமணி,அமலாத்தாள், செந்தில்குமார் ஆகியோர் கதறியுள்ளனர்.
அலறல் சத்தம்
அப்போது அவர்கள் மீது கன்முடிதனமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் 3 பேரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் நகை, பணத்துக்காகக் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா எனக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.