மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!

Tamil nadu Death
By Jiyath Oct 04, 2023 03:04 AM GMT
Report

மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் சோப்ராஜ் (47) மற்றும் அவரின் மனைவி சித்ரா (45). இவர்களுக்கு ஆதிரா (24) என்ற மகளும் அஷ்வின் (21) என்ற மகனும் இருந்தனர்.

மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி! | 3 Members Died Of Electric Shock In Kanyakumari

மகள் ஆதிரா தற்போது 8 மாத கர்ப்பிணியாக வீட்டில் இருந்தார். நேற்று மாலை 6 மணியளவில் அந்த பகுதியில் மழை பெய்துள்ளது. இவர்களது பக்கத்து வீட்டின் தகர கூரை மீது மின்வயர் பட்டு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.

இதனையறியாமல் மகன் அஷ்வின் இரும்பு கம்பியால் தகர மேற்கூரையை நகர்த்தியுள்ளார். அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது.

3 பேர் பலி

அவரின் அலறல் சத்தம் கேட்டு தாய் ஜெயசித்ரா மற்றும் சகோதரி ஆதிரா ஆகியோர் ஓடிவந்து காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்ததில், 3 பெரும் உடல் கருகிய நிலையில் கீழே விழுந்தனர்.

மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி! | 3 Members Died Of Electric Shock In Kanyakumari

இவர்களின் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் 3 போரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 3 பெரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து திருவட்டார் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.