தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மரணம்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த கன்னிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்.
சகோதரி மகேஸ்வரியின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் குடும்பத்துடன் பார்த்திபன் பார்க்க வந்துள்ளார்.
உடல்நலமில்லாத குழந்தையை மகேஸ்வரியும் அவரது கணவர் ராம்நாத் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
வீட்டில் பார்த்திபன், மனைவி சித்ரா, இரண்டரை வயது குழந்தை இருந்துள்ளனர், இரவு அங்கேயே தூங்கியுள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து மகேஸ்வரியும், அவரது கணவரும் வீடு திரும்பிய போது வீட்டின் படுக்கை அறையில் இருந்து கருகிய வாடை வந்துள்ளது.
வீடு முழுவதும் புகை மண்டலமாக இருந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பொலிசார் வந்து பார்த்த போது, படுக்கை அறையில் பார்த்திபன் தனது குடும்பத்தினருடன் உடல் கருகிய நிலையில் இறந்துகிடந்தார்.
தீயணைப்பு துறையினர் வந்து உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் இரவு கொசுவர்த்தி சுருள் ஏற்றி வைத்திருந்ததால் அதனால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.