3 காதலிகளை ஒரே மேடையில், ஒரே நேரத்தில் தாலி கட்டி அன்று முதலிரவு நடத்திய 42 வயது நபர்
மத்தியபிரதேச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சர்பஞ்ச் (42). இவர் போபாலிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நன்பூர் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார்.
இவர் 3 பெண்களை பல ஆண்டுகளாக சர்பஞ்ச் காதலித்து வந்துள்ளார். சர்பஞ்ச் அப்பெண்களை கல்யாணம் செய்யாமலேயே 6 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார்.
இதனையடுத்து, அந்த 3 காதலிகளையும் திருமணம் செய்ய முடிவெடுத்தார் சர்பஞ்ச். இதனையடுத்து, அந்த 3 பெண்களையும் ஒரே நாளில் திருமணமேடையில் தாலி கட்டி திருமணம் செய்தார். இத்திருமணத்தில் அவருக்கு பிறந்த 6 குழந்தைகளும் இந்த திருமண சடங்குகளில் பங்கேற்றனர்.
இதனையடுத்து, அவருக்கு அன்று 3 பேருடன் ஒரே நேரத்தில் முதலிரவு நடத்தியுள்ளார்.
இத்திருமணம் பற்றி மணமகன் கூறுகையில், தான் 2003ம் ஆண்டு எனது முதல் காதலியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டேன். கடந்த 15 ஆண்டுகளாக, எனது மற்ற 2 பெண்களும் திருமணமாகாமலே தன்னுடன் வாழ்ந்து வந்தனர் என்றார்.

