உயிருள்ள பாம்பின் தலையை கடித்து துப்பிய இளைஞர் - திடுக்கிடும் சம்பவம்!
பாம்பை பிடித்து வாயால் கடித்து இரு துண்டுகளாக்கி சாலையில் வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தண்ணீர் பாம்பு
ராணிப்பேட்டை, அரக்கோணம் அருகே உள்ள சின்னகைனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மோகன்(33) சூர்யா(21) மற்றும் சந்தோஷ்(21). இந்த மூவரும் அவர்களது குடியிருப்பு பகுதிக்கு அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது அங்கு வந்த தண்ணீர் பாம்பு ஒன்றை கையில் பிடித்துள்ள மோகன் ‘எல்லோரும் என்னைப் பிணந்தின்னினு கூப்பிடுறீங்க. நான் பிணந்தின்னினு இன்னைக்கு நிரூபிக்கப் போறேன்’ என்று சொல்லி,
இளைஞர்கள் அட்டூழியம்
பாம்பை வாயால் கடித்து இரு துண்டாக்கியுள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், ஆற்காடு வனச்சரகர் சரவணபாபு தலைமையிலான வனத்துறை போலீசார்,
அவர்கள் மீது வனவிலங்குகளை துன்புறுத்துதல், வீடியோ பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.