3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை வந்தடைந்தது
மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு 3 லட்சம் தடுப்பூசி கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது. மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு 3 லட்சம் தடுப்பூசி கொண்டு வரப்பட்டது.
இன்று வந்த கோவிஷீல்டு தடுப்பூசியை சேர்த்தால் மொத்தம் 8.6 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள் கையிருப்பில் உள்ளது.
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டு பின்னர் தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்படவுள்ளது
இதற்கிடையில், நாளை மறுநாள் முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட உள்ளது.