3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி தமிழகம் வந்ததது!

tamilnadu 3lakvaccine covshield
By Irumporai Jun 12, 2021 01:56 PM GMT
Report

மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்ததுள்ளது.

மத்திய அரசு தடுப்பூசி விநியோகத்தை பொறுப்பேற்று மாநிலங்களுக்கு பிரித்து வழங்கி வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு இன்று மாலை மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்தது.

இன்று காலையில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 270 கோவாக்சின் தடுப்பூசிகள் வந்த நிலையில் மாலையில் கோவிஷீல்டு தடுப்பூசியில் வந்துள்ளது.

நேற்று 3.65 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.