மாபெரும் சாதனைப் படைத்த இந்திய அணி... - ஐசிசி தரவரிசையில் முதல் 5 இடங்களில் 3 பேர்... - குவியும் வாழ்த்து...!

Cricket Indian Cricket Team International Cricket Council
By Nandhini Feb 22, 2023 11:46 AM GMT
Report

இன்று வெளியான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்தியா அணி முதல் 5 இடங்களில் 3 இந்திய வீரர்கள் முன்னேறி அசத்தியுள்ளனர். 

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

இன்று டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இந்த தர வரிசைப் பட்டியலில், அதன்படி பந்துவீச்சாளர் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசியதால் அவர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவர் இந்த இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் விக்கெட்டுகளை கைப்பற்றினாலே அவர் முதலிடத்திற்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.

ஏனென்றால் முதலிடத்தில் உள்ள ஆண்டர்சனுக்கும் அவருக்கும் வெறும் 2 புள்ளிகள் மட்டுமே வித்தியாசத்தில் உள்ளார். பேட் கம்மின்ஸ் 3வது இடத்திலும், இந்திய வீரர் ஜடேஜா 9வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

3-indians-top-five-latest-icc-all-rounder-ranking

ஆல் ரவுண்டர் பட்டியலில் இந்திய அணி

ஆல் ரவுண்டர் பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும், 2 வது இடத்தில் அஸ்வினும், அக்சர் படேல் 5வது இடத்திலும் முன்னேறி இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதால் இவர்களில் ஐசிசி தர வரிசைப் பட்டியலில் 5 இடத்திற்குள் முன்னேறி இருக்கிறார்கள்.

பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் , ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஸ்சேன் முதலிடத்திலும், இந்திய அணியின் ரிஷாப் பண்ட் 6 வது இடத்திலும், ரோகித் சர்மா 7வது இடத்திலும் இடத்திலும் இருக்கிறார்கள்.