தென்னாப்பிரிக்கா தொடரில் வாய்ப்பு கிடைத்தும் இந்திய அணியில் இடம் பெறாத 3 வீரர்கள் இவர்கள் தான்..!
தென்னாப்பிரிக்கா தொடரில் வாய்ப்பு கிடைத்தும் இந்திய அணியில் இடம் பெறாத 3 வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடர் இன்னும் சில தினங்களில் முடியவுள்ள நிலையில் ஒருநாள் போட்டி க்ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைத்தும் அணியில் இடம் பெற முடியாமல் போன 3 வீரர்கள் பற்றி இதில் காண்போம்.
முதலாவதாக வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் பிரஷித் கிருஷ்ணா ஒருநாள் தொடரில் இடம் பெற்றாலும் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே இந்திய அணி களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் தான்.
இரண்டாவதாக ஒருநாள் தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக ஷிகர் தவான் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இரண்டு அனுபவ வீரர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூப்பரான பார்மில் இருக்கும் ருத்ராஜ் கெய்க்வாட் விளையாடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என கூறப்படுகிறது.
மூன்றாவதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் போட்டியில் பங்கேற்க முடியாவிட்டாலும், எப்படி என்றாலும் இந்திய அணியில் அஸ்வினுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால் இவரும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.