முடிவுக்கு வரும் மூன்று கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை - அதிர்ச்சியில் ரசிகர்கள்
இந்திய அணியில் பார்மில் இல்லாத 3 நட்சத்திர வீரர்களுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் வருகிற ஜூன் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென்னாப்பிரிக்கா அணி 5 டி20போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவில் தொடர் தோல்வியை தழுவிய இந்திய அணி அதற்கு பழிதீர்க்கும் வகையில் களமிறங்கவுள்ளதால் அணி தேர்வில் பிசிசிஐ கூடுதல் கவனம் செலுத்த உள்ளது.
இந்தத் தொடர் எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான முன்னோட்டமாக இருப்பதால் நட்சத்திர வீரர்களாக இருந்தும் பார்மில் இல்லாத வீரர்களுக்கு இந்த தொடரில் ஒருமுறை வாய்ப்பளித்து சோதித்து பார்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்திய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்த புவனேஸ்வர் குமார் தற்போது மிக மோசமாக பந்து வீசி வருகிறார்.ஆனாலும் இந்திய அணி இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை வழங்கி கொண்டு தான் வருகிறது .இருந்தபோதும் எதிர்வரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர் தான் இவருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கக்கூடும்.
இதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி வந்தாலும் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.இவருக்கும் ஏற்கனவே அதிகப்படியான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதால் இம்முறை சாதிப்பாரா என்பதை பார்க்கலாம்.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தமிழ் பேசும் வீரர் வெங்கடேச ஐயர்2021 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அடுத்து விளையாடிய போட்டியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை என்பதால் அவருக்கும் இது கடைசி வாய்ப்பாக இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.