தென்னாப்பிரிக்கா தொடர் தான் கடைசி வாய்ப்பு - இந்த 3 வீரர்களுக்கு அணியில் இடமில்லை
தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பின் இந்திய அணியில் பார்மில் இல்லாத 3 வீரர்களுக்கு அணியில் இடம் கிடைப்பது சிரமம் தான் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ருத்ராஜ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. அதேசமயம் அணியில் 3 சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு அதை அவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்றால் இதுதான் அவருடைய கடைசி ஒருநாள் தொடராக இருக்க வாய்ப்புள்ளது.
முதலாவதாக மிஸ்டர் ஐசிசி என்று அழைக்கப்படும் அளவிற்கு ஐசிசி தொடரில் மிக சிறந்த முறையில் தனது பங்களிப்பை இந்திய அணிக்காக கொடுத்துள்ள தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஏற்கனவே இந்திய அணிக்கான t20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். தென்னாப்பிரிக்கா தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தவான் தற்போது நடந்து முடிந்த விஜய் ஹசாரே போட்டியில் மிக மோசமான முறையில் விளையாடி வெறும் 58 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.
ஒருவேளை வாய்ப்பு கொடுக்கப்பட்டு அதை அவர் சரியாக பயன்படுத்தவில்லை என்றால் இந்த ஒருநாள் தொடர் தான் அவருடைய கடைசி ஒருநாள் தொடராக இருக்கும்.
இரண்டாவதாக தனது முழு உடற்தகுதியை மீண்டும் நிரூபிப்பதற்காக கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வரும் ஹர்திக் பாண்டியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெறுவது கடினம். ஒருவேளை வாய்ப்பு கிடைக்கும் தொடரில் சொதப்பினாலும் சிக்கல் தான்.
மூன்றாவதாக இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பாக செயல்பட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.இவரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைத்தால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வாய்ப்பு மீண்டும் கதவை தட்டுவது சிரமம் தான் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.