எண்ட்ரீ கொடுக்கும் விராட் கோலி…. வாய்ப்பை இழக்கும் மூன்று வீரர்கள்

 நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் விராட் கோலி அணிக்கு திரும்புவதால் மூன்று வீரர்கள் தங்கள் இடத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி,இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டெஸ்டில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. 

ஆனால் நியூசிலாந்து அணியை வெல்ல முடியாமல் போட்டி டிராவில் முடிந்தது. இதனிடையே 2வது டெஸ்ட் போட்டி வரும் 3ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் விராட் கோலி களமிறங்குவதால் மூன்று வீரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதலாவதாக முதல் டெஸ்டில் தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்ற ரஹானே பல போட்டிகளில் வாய்ப்பளித்தும் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தவில்லை என்பதால் இடத்தை இழப்பார் என கணிக்கப்பட்டுள்ளது. 

முதல் டெஸ்டில் இளம் வீரர் மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவர் தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. இவரும் அந்த மூவரின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 

மூன்றாவதாக தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர்(105,65) ரன்கள் அடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். அதேசமயம் ரஹானே மற்றும் மயங்க் அகர்வாலை விடுவிக்க இந்திய அணி விரும்பவில்லை என்றால் விராட் கோலியின் வருகை காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் தான் பெஞ்சில் அமர வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்