விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் சீரியல் நடிகைகள் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

vikram vijaysethupathi
By Petchi Avudaiappan Sep 01, 2021 10:22 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in வதந்திகள்
Report

நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் விக்ரம் படத்தில் அவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகைகள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

விக்ரம் படத்தில் டிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் வில்லனாக நடிக்கும் நிலையில் அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் சீரியல் நடிகைகள் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | 3 Heroines For Vijay Sethupathi In Vikram

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தில் நடிக்கும் நடிகைகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி ஷிவானி, மைனா நந்தினி, மகேஷ்வரி ஆகிய சின்னத்திரை நடிகைகள் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.