உயிரை மாய்த்துக் கொண்ட சிறுமிகள்: டைரியில் எழுதியிருந்தது என்ன?

By Pavi Feb 06, 2026 06:44 AM GMT
Report

இந்தியாவின் காசியாபாத்தில் மூன்று மைனர் சகோதரிகள் ஒன்பதாவது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து குதித்து தங்களது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கொரிய 'லவ் கேம்'

காசியாபாத் எனும் இடத்தில் கொரிய லவ் கேமிற்கு அடிமையாகி மூன்று சிறுமிகள் தற்போது அவர்கள் உயிரை மாய்த்து கொள்ளும் அளவிற்கு வந்துள்ளனர்.

அந்த சகோதரிகள் நிஷிகா (16), பிராச்சி (14), பாகி (12) ஆகிய 3 சகோதரிகளாவர். இவர்கள் அதிகாலை 2.30 மணியளவில் தங்கள் குடியிருந்த குடியிருப்பில் 9ம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

உயிரை மாய்த்துக் கொண்ட சிறுமிகள்: டைரியில் எழுதியிருந்தது என்ன? | 3 Girls Wrong Decision After Addicted Online Game  

குழந்தைகள் கேமில் அடிமையாக இருக்கின்றனர் என பெற்றோர் அவர்களை கண்டித்துள்ளனர். அதற்காக அவர்கள் தங்கள் குறிப்பு டயரி ஒன்றில் சுமார் 8 பக்கத்திற்கு குறிப்பு எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அவர்கள் எழுதிய குறிப்பாக "ஸாரி அப்பா  கொரியாவை விட்டு விலக முடியாது. அதுவே எங்கள் வாழ்க்கை, அதிலிருந்து நீங்கள் எங்களைப் பிரிக்க முடியாது.

அதனால்தான் தற்கொலை செய்கிறோம்" எழுதியிருந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் நாங்கள் கொரியாக்காரர்​கள். எங்​களுக்கு கொரியா பாப் இசை​தான் பிடிக்​கும்.

உயிரை மாய்த்துக் கொண்ட சிறுமிகள்: டைரியில் எழுதியிருந்தது என்ன? | 3 Girls Wrong Decision After Addicted Online Game  

நீங்​கள் இந்​தி​யர்​கள் உங்​களுக்கு பாலிவுட்​தான் பிடிக்கும். நாங்​கள் கொரி​யாவை எங்கள் குடும்​பத்தை விட அதிகம் நேசிக்​கிறாம்.

எங்​களுக்கு கொரியா, தாய்​லாந்​து, அமெரிக்​கா, லண்​டன் மற்​றும் ஜப்​பான் நடிகர்​கள் மற்​றும் பொழுது​போக்கு நிகழ்ச்​சிகள் ​தான் பிடிக்கும் என இன்னும் பல விடயங்களை எழுதி உள்ளனர்.