கடற்கரையில் கொன்று புதைக்கப்பட்ட 3 இளம்பெண்கள் - இறப்பதற்கு முன் செய்த செயலால் அதிர்ச்சி

Attempted Murder Ecuador Crime
By Sumathi Apr 19, 2023 12:49 PM GMT
Report

3 இளம்பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை

ஈகுவேடார், குயினேட் பகுதியில் உள்ள கடற்கரையில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் நாய் கடற்கரையின் ஓரத்தில் தோண்டியது. அதில் 3 பெண்களின் சடலம் கண்டறியப்பட்டது. அதில் நயேலி டாபிய(22) எனும் மாடல் அழகி, யூலியானா மசியாஸ்(21) எனும் பாடகி மற்றும் மாணவி டெனிஸ் ரெய்னா(19) என்பது தெரியவந்தது.

கடற்கரையில் கொன்று புதைக்கப்பட்ட 3 இளம்பெண்கள் - இறப்பதற்கு முன் செய்த செயலால் அதிர்ச்சி | 3 Girls Brutally Killed And Buried In Ecuador

3 பெண்களும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கொண்டுவந்த ஆடைகள் மற்றொரு இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. கைகள் கட்டப்பட்டு, வாயும் மூடப்பட்டிருந்ததற்கான அடையாளங்கள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்தில் இருந்து போலீசார் ஒரு மொபைல் ஃபோனை மீட்டுள்ளனர்.

குறுஞ்செய்தி 

தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், 3 பேரில் இரண்டு பேர் இறப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு தங்கள் குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர்.

டெனிஸ் தனது நண்பர் ஒருவருக்கு “ஏதோ நடக்கப் போகிறது என்று நான் உணர்கிறேன், எனக்கு ஏதாவது நடந்தால், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்” எனக் குறீப்பிட்டு அனுப்பியுள்ளார்.

இதேபோல் நான்கு வயது மகளைக் கொண்ட டாபியா தனது சகோதரிக்கு, தனது இருப்பிடத்தை குறிப்பிட்டு வாட்ஸ்அப்பில், சும்மா உனக்கு நான் தகவல் தெரிந்து கொள்வதற்காக அனுப்புகிறேன் என தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது.