ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் : தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய பாஜக
விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி அன்று இலவச சிலிண்டர் வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளது.
கர்நாடகா தேர்தல் :
கர்நாடகாவில் உள்ள 244 தொகுதிகளுக்கு வரும் 10 - ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது, சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் , ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆளும் பாஜக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.

தேர்தல் வாக்குறுதிகள்
அதன் படி , , கர்நாடகாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது. பாஜக வென்றால் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் உகாதி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி அன்று இலவச சிலிண்டர் வழங்கப்படும் என்றும் ஆண்டுக்கு ஒரு முறை வயதானவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தால் உயர்மட்ட குழுவின் பரிந்துரையை ஏற்று பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். மிஷன் ஸ்வஸ்தையா கர்நாடகா என்ற பெயரில் அனைத்து வசதிகளுடன் அனைத்து வார்டுகளிலும் கிளினிக் அமைக்கப்படும்.
கர்நாடகாவில் ஒவ்வொரு நகராட்சியிலும் குறைந்த விலையில் தரமான உணவு வழங்க அடல் உணவகம் அமைக்கப்படும். ஏழைகளுக்கு தினமும் அரை லிட்டர் இலவச பால், மாதம் 5 கிலோ இலவச பருப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.