தவெக தோழமை கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட 3 விஷயங்கள் - மாணிக்கம் தாகூர் விளக்கம்

Vijay Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Jul 01, 2026 02:14 PM GMT
Report

தவெக தோழமை கட்சிகள் கூட்டத்தில் 3 விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம் என மாணிக்கம் தாகூர் பேசியுள்ளார்.

தவெக தோழமை கட்சிகள் கூட்டம்

சென்னை கோவலத்தில் உள்ள தனியார் விடுதியில், தமிழ்நாடு முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் தலைமையில் தவெக தோழமை கட்சிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. 

தவெக தோழமை கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட 3 விஷயங்கள் - மாணிக்கம் தாகூர் விளக்கம் | 3 Discussions In Vijay Tvk Alliance Parties Meet

இதில், தவெக தரப்பில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தோழமை கட்சிகளான காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

தவெக தோழமை கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட 3 விஷயங்கள் - மாணிக்கம் தாகூர் விளக்கம் | 3 Discussions In Vijay Tvk Alliance Parties Meet

காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

விவாதிக்கப்பட்ட 3 விடயங்கள்

இந்த கூட்டத்திற்கு பின்னர் தோழமை கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

இதில் பேசிய மாணிக்கம் தாகூர், "இன்றைய கூட்டம் ஒரு நல்ல தொடக்கம். தவெக தலைமையில் நடந்த தோழமைக் கட்சிகளின் கூட்டத்தில் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தினோம்.

தவெக தோழமை கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட 3 விஷயங்கள் - மாணிக்கம் தாகூர் விளக்கம் | 3 Discussions In Vijay Tvk Alliance Parties Meet

இந்தக் கூட்டணிக்கு ஒருங்கிணைப்புக் குழு உருவாக்க வேண்டும், குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்க வேண்டும், கூட்டணிக்கான பெயர் ஆகிய 3 விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம்" என கூறினார்.

தேசிய அளவிலான INDIA கூட்டணியில் தவெக இடம் பெறுமா என்ற கேள்விக்கு, "யார் யாரெல்லாம் எம்.பிக்கள் வைத்தார்களோ அவர்கள்தான் INDIA கூட்டணியில் இருக்கிறார்கள். எப்போது தவெகவிற்கு எம்பிக்கள் வருகிறார்களோ அப்போது உடனடியாக INDIA கூட்டணி பற்றி பேசுவோம்" என பதிலளித்துள்ளார்.