காரணமே இல்லாமல் இலங்கை தொடரில் புறக்கணிக்கப்பட்ட 3 இந்திய வீரர்கள் இவர்கள் தான்..!
இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான தொடர் இன்று தொடங்கவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதலில் நடைபெறும் டி20 தொடர் இன்று தொடங்குகிறது.
இதில் பல இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்ற நிலையில் எதிர்பார்த்த சில வீரர்கள் அணியில் இடம் பெறவில்லை. இதனால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த மூன்று வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக நீண்ட நாட்களாகவே இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் விருத்திமான் சஹா தனக்கு இலங்கை தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் இந்திய அணியின் தேர்வாளர்கள் குழு அவரை ரஞ்சி கோப்பையில் கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட அறிவுறுத்தியுள்ளது.
கடந்தாண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் பங்கேற்று 9 விக்கெட்களை வீழ்த்தி அசத்திய அக்ஸர் படேல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்த நிலையில் இலங்கை தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதேபோல உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் 25 வயதான இளம் வீரர் ஆவேஷ் கானுக்கு இலங்கை தொடரில் வாய்ப்பளிக்கப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.