3 நாள் டாஸ்மாக் விடுமுறை.., பல கோடிக்கு மது விற்பனை
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
மொத்தம் 234 தொகுதிகளுக்கான தேர்தலில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர் ஆவார்.
தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.73 கோடியாகும், அதில் 2.80 கோடி ஆண்கள், 2.93 கோடி பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.

தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகள் ஏப்ரல் 21 முதல் 23 வரை மூடப்பட்டுள்ளன.
மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ஆம் தேதியும் மதுக்கடைகள் மூடப்படும் என்பதால் முன்கூட்டியே மக்கள் அதிகளவில் மதுபானங்களை வாங்கினர்.
அந்தவகையில், ஒரே நாளில் ரூ.400 கோடி மதுபான விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னர் நாடாளுமன்ற தேர்தலில் ரூ.320 கோடி விற்பனை இருந்த நிலையில் இந்த முறை ரூ.80 கோடி அதிகரித்துள்ளது.