ஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி தாக்குதல் - சிறுவர்களை செருப்பால் அடிக்கும் இளைஞர்
ஜெய் ஸ்ரீராம் சொல்லி கூறி சிறுவர்களை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜெய் ஸ்ரீராம்
3 சிறுவர்களை ஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இளைஞர் ஒருவர் செருப்பால் அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் 13, 11 மற்றும் ஆறு வயதுடைய 3 சிறுவர்களை இளைஞர் ஒருவர் ஜெய் ஸ்ரீராம் என கூறுமாறு செருப்பை வைத்து தாக்கியுள்ளார். அந்த சிறுவன் அல்லாஹ் என கூறியதையடுத்து ஜெய் ஸ்ரீராம் என சொல்லி சொல்லி தாக்குவார்.
வழக்குப்பதிவு
இந்த சம்பவமானது மத்திய பிரதேச மாநிலம், ரத்லம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உறவினர்கள் மனக் சவுக் காவல் நிலையில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து புகாரின் அடிப்படையில் மதத்தின் அடிப்படையில் குழுக்களிடையே பகை, வெறுப்பு மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், இளைஞரை தேடி வருகின்றனர்.