3 குழந்தைகள் அவசியம் - கட்டாயப்படுத்தும் அரசு!

COVID-19 China
By Sumathi Jun 11, 2022 10:16 PM GMT
Report

மக்கள்தொகையில் சரிவை எதிர்கொண்டிருக்கும் சீனா, வலுக்கட்டாயமாக சீன தம்பதிகளை குழந்தை பெற்றுக்கொள்ள நிர்பந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள்தொகை

உலகின் அதிக மக்கள்தொகையை கொண்ட சீனா, மக்கள் தொகையை கட்டுப்படுத்த 1979 ஆம் ஆண்டு ஒரு குழந்தை திட்டத்தை கொண்டுவந்தது.

3 குழந்தைகள் அவசியம் - கட்டாயப்படுத்தும் அரசு! | 3 Children Forced Government Orders

இரண்டாவது குழந்தை கருத்தரித்தால், அதனை கட்டாயமாக கலைக்க நிர்பந்திக்கப்பட்டனர். இதனால், கோடிக்கணக்கான கருக்கலைப்புகள் அங்கு அரங்கேறின.

மனித சக்தி 

இதன் விளைவு சீனாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கியது. மறுபுறம் உழைக்கும் இளம் வயதினர் எண்ணிக்கை சரியத்தொடங்கியது.

3 குழந்தைகள் அவசியம் - கட்டாயப்படுத்தும் அரசு! | 3 Children Forced Government Orders

இதனால், வரும் காலத்தில் தொழில்துறைக்கு தேவையான மனித சக்தி இல்லாமல் போகும் அபாயத்தை சீனா எதிர்கொண்டுள்ளது. இதனால், கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு குழந்தை திட்டத்தை சீனா கைவிட்டது.

சீன தம்பதியினர் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்றது. இருப்பினும், மக்கள் தொகையில் வளர்ச்சி காணாத நிலையில், மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

இதற்காக மானியமும், சலுகைகளும், சீன அரசு வழங்கி வந்தது. பெற்றுக்கொண்ட குழந்தைகளை பராமரிக்க வங்கியில் குறைந்த வட்டியில் கடன் என்ற கவர்ச்சி அறிவிப்புகளும் வெளியாகின.

ஆனால், இவை அனைத்து சீன இளைஞர்களால் கவரவில்லை. கொரோனா ஊரடங்கு, பொருளாதார நிலை, கல்வி ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீன தம்பதியினர் மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை.

மறுபுறம் சீன இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்ற தகவலும் தெரியவந்தது. சீன மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படவில்லை என்பதை சீனாவின் தேசிய புள்ளி விபர பணியகத்தின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த நிலையில், மக்கள் தொகையை அதிகரிக்க சீன இளைஞர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்றும்,

ஒரு தம்பதி குறைந்தது மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அரசு கட்டாயப்படுத்த தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.