காருக்குள் விளையாடிய 3 குழந்தைகள் மூச்சுத்திணறி பலி

By Irumporai Jun 04, 2022 03:19 PM GMT
Report

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே லெப்பை குடியிருப்பில் தனது வீட்டின் அருகே உறவினரின் காருக்குள் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்த 3 சிறுமிகள் மூச்சுத்திணறி பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே லெப்பைக் குடியிருப்பை சார்ந்த நாகராஜன் மகன் நித்திரை(7) மகள் நிதிஷா(5) மற்றும் சுதாகரின் மகன் கபிசந்த்(4) ஆகியோரின் மூன்று குழந்தைகள், பக்கத்து வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த நாகராஜனின் அண்ணன் மணிகண்டனின் காரில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

காருக்குள் விளையாடிய  3 குழந்தைகள் மூச்சுத்திணறி பலி | 3 Children Death Playing In The Car

மூன்று சிறுமிகளும் கார் கதவைத்திறந்து காருக்குள் விளையாடிக் கொண்டிருந்தனர். மாலை நேரமாகி விட்டதால் கதவை திறக்க முயன்றபோது கதவை திறக்க தெரியாததினால் மூச்சுத்திணறி காருக்குள்ளே உயிரிழந்தனர். இது சம்பந்தமாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.