மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு..!
மணப்பாறை அடுத்த பூசாரிப்பட்டியில் உள்ள குளத்தில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் ழுழ்கி உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அண்ணா நகரைச் சேர்ந்த முருகன் என்பவருடைய மகன்கள் மணிகண்டன்(16),முரளி(12),மற்றும் லிங்கேஸ்வரன் மகன் அஸ்வின் ராஜ்(14) ஆகியோர் பூசாரிப்பட்டியில் உள்ள பாப்பான்குளத்திற்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
குளிக்க சென்ற சிறுவர்கள் வெகு நேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்க்ள குளத்திற்கு சென்று பார்த்த போது துணிகள் மட்டும் குளத்தின் அருகே கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இளைஞர் குளத்தில் இறங்கி தேடிய போது சிறுவர்கள் மூவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவர்களின் உடல்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குளத்தில் மூன்று சிறுவர்கள் முழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.