சான்ட்விச் சாப்பிட்ட 3 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

By Thahir Sep 27, 2022 10:21 AM GMT
Report

கேன்டீனில் சான்ட்விச் வாங்கி சாப்பிட்ட 2 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி 

ராணிப்பேட்டையில் உள்ள கேன்டீனில் சான்ட்விச் வாங்கி சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர் சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை அருகே உள்ள தனியார் கேன்டீனில் 3 சிறுவர்கள் சான்ட்விச் வாங்கி சாப்பிட்ட நிலையில் 3 பேருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

சான்ட்விச் சாப்பிட்ட 3 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி | 3 Boys Admitted To Hospital After Eating Sandwich

இதையடுத்து பாதிக்கப்பட்ட 3 பேரும் ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினர்.

இது குறித்து தகவல் அறிந்து சிறுவர்களின் வீட்டுக்குச் சென்ற தமிழக கைத்தறித்துறை அமைச்சர் காந்தி 3 சிறுவர்களையும் உயர் சிகிச்சைக்ககாக வேலுார் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.