கேரளா: கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டரங்கில் 3 முறை குண்டு வெடிப்பு - ஒருவர் பலி, 37 பேர் படுகாயம்!

Kerala India Death
By Jiyath Oct 29, 2023 09:30 AM GMT
Report

கேரளா மாநிலத்தில் கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டரங்கில் அடுத்தடுத்து 3 முறை பயங்கர சத்தத்துடன் தொடர் குண்டு வெடிப்பு நடந்துள்ளது

குண்டு வெடிப்பு

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறித்துவ மதவழிபாட்டு கூட்டரங்கு 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் கிட்டத்தட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கேரளா: கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டரங்கில் 3 முறை குண்டு வெடிப்பு - ஒருவர் பலி, 37 பேர் படுகாயம்! | 3 Blasts In Ernakulam Kerala 1 Woman Killed

இந்நிலையில் இன்று காலை மக்கள் அதிகமாக பிரார்த்தனை செய்யும் பகுதியில் 3 முறை பயங்கர சத்தத்துடன் தொடர் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பயங்கர ஏற்பட்ட தீ விபத்தில் அருகிலிருந்த பொருள்கள் அனைத்தும் பற்றி இருந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் இதில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 37க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தற்போது அந்த இடத்தில் என்ன வெடித்தது? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போலீசார் தீவிர விசாரணை

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அளித்த பேட்டியில் "காயமடைந்த 35க்கும் மேற்பட்டோரில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நடைபெற்றது பயங்கரவாத தாக்குதலா? என்பது பற்றி விசாரணைக்கு பிறகே தெரியவரும் ” என்று தெரிவித்துள்ளார்.

கேரளா: கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டரங்கில் 3 முறை குண்டு வெடிப்பு - ஒருவர் பலி, 37 பேர் படுகாயம்! | 3 Blasts In Ernakulam Kerala 1 Woman Killed

தற்போது, குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து கேரள காவல்துறையானது தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். குண்டுவெடிப்பு நடந்த அரங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டு அப்பகுதியில் தீவிரமாக தீயணைப்புத் துறையினரால் மீட்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இதன் எதிரொலியாக கேரளா முழுவதும் கண்காணிப்பானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும், இது பயங்கரவாத செயலா ? என விசாரணை நடத்த பயங்கரவாத தடுப்பு அமைப்பான தேசிய பாதுகாப்பு படை, தேசிய புலனாய்வு முகமை குழுக்களை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, NSG, NIA குழுக்கள் கேரளா விரைந்து இருக்கிறது.