நிதியமைச்சர் பிடிஆர் கார் மீது காலணி வீச்சு சம்பவம் : 3 பெண்கள் அதிரடி கைது

DMK Palanivel Thiagarajan
By Irumporai Aug 16, 2022 03:18 AM GMT
Report

அமைச்சர் பிடிஆர் கார் மீது காலணி வீச்சு சம்பவம் தொடர்பாக பாஜக மகளிரணியை சேர்ந்த 3 பெண்கள் அதிரடி கைது செய்யப்பட்டனர்.

செருப்பு வீச்சு சம்பவம் 

காஷ்மீரில் வீரமரணமடைந்த லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் புயலை கிளப்பியது.

நிதியமைச்சர் பிடிஆர் கார் மீது காலணி வீச்சு சம்பவம் : 3 பெண்கள் அதிரடி கைது | 3 Bjp Women Members Arrested In Sliper Ptrs Car

இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாவட்ட துணைத்தலைவர் உட்பட 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மூன்று பெண்கள் கைது

இந்த நிலையில் அமைச்சர் பிடிஆர் வந்த கார் மீது காலணி வீசிய சம்பவத்தில் பாஜக மகளிர் அணியை சேர்ந்த 3 பெண்களை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சரண்யா,தனலெட்சுமி, தெய்வானை ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இதன் மூலம் அமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவத்தில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.