இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி - 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்திய அணி!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது.
டெஸ்ட் போட்டி
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது வேஸ்ட் இண்டீஸ். இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதில் சிறப்பாக ஆடிய விராட் கோலி சதம் அடித்து 121 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த போட்டியில் ரோகித் சர்மா 80 ரன்களும், ஜடேஜா 61,ஜெய்ஸ்வால் 57,அஷ்வின் 56 ரன்களும் எடுத்தனர். பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீசின் கீமர் ரோச், வாரிகன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹோல்டர் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி பிராத்வெய்ட் 75 ரன்கள், அலிக் 37,சந்தர்பால் 33, மெக்கன்சி 32 ரன்களையும் எடுத்தனர். இன்னிங்சில் மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் இன்னிங்சின் 3ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்தது.
இந்நிலையில் 4ம் நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் சிறப்பாக பந்து வீசிய சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகேஷ் குமார் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து 2வது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணியில் ரோகித் ஷர்மா 57,ஜெய்ஸ்வால் 38 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களை குவித்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது.
பின்னர் ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் சுப்மண் கில் மற்றும் இஷான் கிஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்திய அணி 181 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 365 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் ஆனது.
இந்திய அணி வெற்றி
பின்னர் 4ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 76 ரன்களை எடுத்திருந்த நிலையில் வெற்றிபெற மேலும் 289 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் 5ம் நாள் ஆட்டமான இன்றைய போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிராவில் டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.