2-வது ஒருநாள் கிரிக்கெட்: இன்று நியூசிலாந்து - இந்திய அணி நேருக்கு நேர் மோதல்...!

Cricket Indian Cricket Team New Zealand Cricket Team
By Nandhini Jan 21, 2023 06:39 AM GMT
Report

இன்று நடைபெற உள்ள 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து - இந்திய அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன.

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது.

சமீபத்தில் இந்தியா -நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் மைதானத்தில் இரு அணிகளுக்கு நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில் இறுதியில் இந்திய அணி 12 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து, இத்தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

2nd-odi-between-india-and-new-zealand-today

2-வது ஒருநாள் கிரிக்கெட் 

இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டிஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இன்று (சனிக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்று முன்னிலை பெற தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல், நியூசிலாந்து இப்போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் வெற்றியை சமன் செய்ய முனைப்புடன் கறத்தில் இறங்க உள்ளது.