கணவருக்கு முன்னின்று 2-வது திருமணம் செய்து வைத்த முதல் மனைவி...! - நெகிழ்ச்சி சம்பவம்

Marriage Viral Photos
By Nandhini 1 வாரம் முன்

கணவருக்கு முன்னின்று 2-வது திருமணம் செய்து வைத்த முதல் மனைவியால் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

திருப்பதி மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாண் என்பவர் டிக் டாக்கில் மிகவும் பிரபலமானவர். இவர் டிக்டாக்கில் நிறைய வீடியோக்கள் பதிவிட்டு வந்தார். இதனையடுத்து, கல்யாண்ணுக்கும், விமலா என்ற பெண்ணுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு பிரபலமடைந்தனர். இவர்களை பின்தொடர்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

இந்நிலையில், திடீரென்று நித்யாஸ்ரீ என்ற பெண் இவர்களின் வாழ்க்கைக்குள் நுழைந்தார். நேரடியாக மனைவி விமலாவிடம் சென்று, உங்கள் கணவரை நான் தான் முதன் முதலில் காதலித்தேன். அவரும் என்னை காதலித்தார். ஆனால்,எங்கள் காதல் சில காரணங்கள் முறிந்துவிட்டது. ஆனால், என்னால் கல்யாணை மறக்க முடியவில்லை. என்னை எப்படியாவது கல்யாணிடம் சேர்த்து வையுங்கள் என்று மனைவி விமலாவிடம் அப்பெண் கதறி அழுதுள்ளாள். விமலா காலில் விழுந்து அப்பெண் கெஞ்சியுள்ளாள்.

2nd-married-first-wife

2-வது திருமணம் செய்து வைத்த முதல் மனைவி

அப்பெண் அழுவதைப் பார்த்து மனம் இறங்கி வந்த விமலா, தன் கணவரை அப்பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்தார். ஆனால், தானும் என் கணவருடன் இருக்க வேண்டும் என்று அப்பெண்ணிடம் சத்தியம் வாங்கியுள்ளார். முதல் மனைவி முன்னிலையில், கல்யாண் நித்ய ஸ்ரீயை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இப்போது மூவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். தற்போது இது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.