நடிகை மீனாவுக்கு 2வது திருமணமா? - கலா மாஸ்டர் முக்கிய தகவல்!

Meena Tamil Cinema Marriage
By Thahir Nov 17, 2023 05:23 PM GMT
Report

நடிகை மீனாவுக்கு 2ஆம் திருமணமா என்ற கேள்விக்கு அவரது தோழி கலா மாஸ்டர் பதில் அளித்துள்ளார்.

மீனாவுக்கு 2வது திருமணமா?

நடிகை மீனாவின் நெருங்கிய தோழியாகவும் அவரது நலன் விரும்பியாகவும் இருக்கிறார் கலா மாஸ்டர். மீனாவின் கணவர் சாகர் இறப்பின் போது கூட முதல் ஆளாக நின்று அனைத்து காரியங்களையும் எடுத்து செய்தார் கலா.

சாகர் இறப்பிற்குப் பிறகு மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்தான செய்திகள் வலம் வர அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது குறித்து கலா யூடியூப் சேனல் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது, “மீனாவுக்கு இரண்டாவது திருமணம் என்ற செய்தி சாகர் இறந்த இரண்டாவது நாளில் இருந்தே வந்து கொண்டிருக்கிறது.

நடிகை மீனாவுக்கு 2வது திருமணமா? - கலா மாஸ்டர் முக்கிய தகவல்! | 2Nd Marriage For Actress Meena

கேட்டால் முறைப்பாள்

அதெப்படி முடியும்? இவ்வளவு சின்ன வயதிலேயே மீனா தனது கணவரை இழந்திருக்கும் போது அந்த துயரத்தில் இருந்து மீண்டு வர அவளுக்கு எத்தனை வருடங்கள் ஆகும்?

மீடியா இதுபோன்ற செய்திகளைப் போட்டாலும் ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா எனத் தெரியாது. என்னிடமே சில பேர் இதுகுறித்துக் கேட்டார்கள். ஏன் இப்படி முட்டாள்தனமாகக் கேட்கிறீர்கள் எனத் திட்டினேன்.

நடிகை மீனாவுக்கு 2வது திருமணமா? - கலா மாஸ்டர் முக்கிய தகவல்! | 2Nd Marriage For Actress Meena

’மீனா 40’ நிகழ்ச்சியில் மீனா குழந்தை இதுபற்றி தெளிவாக சொன்ன பிறகும் கூட சிலர் இதுபற்றி செய்தி பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். தோழிகளுக்குள் நாங்களே மீனாவிடம் விளையாட்டாகக் கேட்டால் கூட, அவள் என்னை முறைப்பாள். இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இது காய்கறி வாங்கும் விஷயம் கிடையாது” எனக் கூறினார். 

You May Like This Video