2-வது திருமணம் செய்துகொண்ட பிரபல இசையமைப்பாளர் இம்மான் - வைரலாகும் புகைப்படங்கள்

D Imman
By Swetha Subash May 15, 2022 08:12 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சினிமா
Report

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இம்மான் சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை விவாகரத்து செய்தார்.

தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த இம்மான், “எனது நலம் விரும்பிகள், தீவிரமான இசை ரசிகர்கள் என்னுடன் எப்போதும் நின்றிருக்கிறீர்கள். அதற்கு நான் என்றுமே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். வாழ்க்கை வெவ்வேறு பாதைகளை கொண்டது.

2-வது திருமணம் செய்துகொண்ட பிரபல இசையமைப்பாளர் இம்மான் - வைரலாகும் புகைப்படங்கள் | 2Nd Marraige Photos Of D Imman Goes Viral

மோனிகா ரிச்சார்டும் நானும் பரஸ்பரம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தோடு எங்களின் திருமண உறவை முடித்து கொண்டு விட்டோம். நாங்கள் கணவன் மனைவி இல்லை. ஆதலால் நலம் விரும்பிகள், இசை ரசிகர்கள், ஊடகம் ஆகியோர் எங்களுக்கான பிரைவசியை தந்து நாங்கள் இதனை கடந்து தொடர்ந்து பயணிக்க உதவ வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரபல இசையமைப்பாளரான டி.இம்மான் கடந்த 2008-ம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இதனை தொடர்ந்து சென்னையை சேர்ந்த உமா என்ற பெண்ணுடன் வரும் மே மாதத்தில் இம்மானுக்கு திருமணம் நடக்க உள்ளதாகவும் பெரியவர்கள் பேசி நிச்சயிக்கப்பட்ட திருமணம் இது எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

2-வது திருமணம் செய்துகொண்ட பிரபல இசையமைப்பாளர் இம்மான் - வைரலாகும் புகைப்படங்கள் | 2Nd Marraige Photos Of D Imman Goes Viral

அதை மெய்ப்பிக்கும்படி தற்போது இம்மான் 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.