உலகின் 2-வது பெரிய இந்துக்கோவில் - அக்டோபரில் திறக்கப்படுகிறது...கோவில் எங்கிருக்கிறது தெரியுமா..?
இந்தியாவுக்கு வெளியே கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய இரண்டாவது இந்துக் கோயில் வரும் அக்டோபர் 8 ஆம் திறக்கப்படவுள்ளது.
உலகின் 2-வது பெரிய கோவில்
இந்தியாவிற்கு வெளியே கட்டப்பட்டுள்ள இந்துக்களின் மிக பெரிய வழிபட்டு கோவில் என்றால் அது அங்கோர்வாட் கோவில் தான். கம்போடியா நாட்டில் கட்டப்பட்டுள்ள இந்த புத்த மத கோவிலை தொடர்ந்து தற்போது இரண்டாவது பெரிய கோவில் கட்டப்பட்டு வருகின்றது.
இக்கோவிலானது, நியூஜெர்ஸி நகரில் கட்டப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இக்கோவிலின் கட்டுமானப்பணியானது, தற்போது வரை அமெரிக்கா முழுவதிலும் இருந்து 12 ஆயிரதிற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களால் தொண்டு வழங்கப்பட்டு கட்டப்பட்டு உள்ளது.
183 ஏக்கர் பரப்பளவில் பெரிய கோவில்
183 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோவில், நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் இருந்து 60 மைல்கள் தெற்கிலும், வாஷிங்டன் நகருக்கு 180 மைல் வடக்கிலும் அமைந்துள்ளது.இந்து வேதங்களின் படி வடிவமைக்கப்பட்டு கோயில் முழுவதும் 10 ஆயிரம் சிலைகளும் பொறிக்கப்பட்டுள்ளது.
பிராதன கோவிலை கடந்து இங்கு ,மேலும் 12 துணை கோயில்களும், ஒன்பது கோபுரங்கள் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்டுமானத்தில் நான்கு வகையான கற்களில் சுண்ணாம்பு, இளஞ்சிவப்பு மணற்கல், பளிங்கு மற்றும் கிரனைட் உள்ளிட்ட இரண்டு மில்லியன் கன அடி கல் பயன்படுத்தப்பட்டது.
அக்டோபர் 8'இல் திறப்பு
இக்கோவில் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி BAPS ஆன்மீக தலைவர் மஹந்த் சுவாமி மகராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் படி முறையாக திறக்கப்பட்டு அக்டோபர் 18 முதல் பார்வையாளர்களுக்காக திறக்கப்படவுள்ளது.
இக்கோவிலில் புனிதப்படுத்த இந்தியாவின் புனித நதிகள் மற்றும் அமெரிக்காவின் 50 மாநிலங்களை சேர்த்து, உலகம் முழுவதிலுமிருந்து 300 க்கும் மேற்பட்ட நீர்நிலைகளிலிருந்து நீர் கொண்டுவரப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.