2ம் தவணை கொரோனா நிவாரணம் - நாளை தொடக்கம்!
By Irumporai
கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணையான ரூ. 2,000 வழங்கும் திட்டத்தை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கொரோனா நிவாரண நிதியாகரூ. 4,000 வழங்கப்படும் என தமிழக அரசி தெரிவித்தது.
இதில் முதல் தவணை ரூ. 2,000 வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மே மாதத்தில் முதல் தவணையாக ரூ. 2,000 வழங்கப்பட்டது.
இந்நிலையில், கருணாநிதியின் பிறந்த நாளான நாளை இரண்டாம் தவணையாக ரூ. 2,000 தொகையும், 14 வகையான மளிகைப் பொருள்கள் கொண்ட தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.