செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

Chennai
By Thahir Dec 12, 2022 07:27 AM GMT
Report

செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர்ந்து நீர் வரத்து உயர்ந்து வருவதால் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

2 ஆயிரம் கன அடி நீர் திறப்பு 

சமீப நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்காங்கே உள்ள அணைகள் ஏரிகள் நிரம்பி வழிந்து வருகிறது.

2k-cubic-feet-water-release-from-chembarambakkam

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர்ந்து நீர் வரத்து உயர்ந்து வருவதால் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காலை 9 மணி முதல் வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது இரு மடங்காக (2000) அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.