இந்திய ராணுவத்தின் 29-வது தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே இன்று பொறுப்பேற்பு - குவியும் வாழ்த்து
India
By Nandhini
இந்திய ராணுவத்தின் 29வது தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே இன்று பொறுப்பேற்றுள்ளார்.
மனோஜ் முகுந்த் நரவானே பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், ஜெனரல் மனோஜ் பாண்டே இன்று ராணுவத் தளபதியாகப் பதவி ஏற்றுள்ளார். இவர் இதற்கு முன் ராணுவத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனோஜ் பாண்டே இந்திய ராணுவத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர். பொறியாளராக பணியாற்றியவர் ராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.
இதனையடுத்து, சமூகவலைத்தளங்களில் இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டேவிற்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
