47 மணி நேரத்தில் சுமார் 2,900 கி.மீ பயணம்; 21 நிறுத்தங்கள் - திருக்குறள் எக்ஸ்பிரஸ் தெரியுமா?
48 மணி நேரத்தில் சுமார் 2,900 கி.மீ தூரம் வரை பயணிக்கும் ரயிலை பற்றிய தகவல்.
அதிவிரைவு ரயில்
இந்தியாவில் பயணிகள் ரயில் முதல் சரக்கு ரயில்கள் வரை அதன் சராசரி வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 90 முதல் 110 கி.மீ வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்த ரயில்கள் தற்போது 130 முதல் 140 கி.மீ வேகத்தில் பயணிக்கின்றன.
மேலும், வந்தே பாரத் ரயில்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 முதல் 180 கி.மீ ஆக உள்ளது. ஆனால், வெறும் 48 மணி நேரத்தில் சுமார் 2,900 கி.மீ தூரம் வரை பயணிக்கும் ரயில் ஒன்று உள்ளது.
திருக்குறள் எக்ஸ்பிரஸ்
இந்த திருக்குறள் அதிவிரைவு ரயில் டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதின் ரயில் நிலையத்திலிருந்து கன்னியாகுமரி வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் காலை 5.20 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்டு 47 மணி நேரம் 20 நிமிடத்தில் கன்னியாகுமரி சென்றடைகிறது.
டெல்லியிலிருந்து புறப்பட்டு சுமார் 130 கிலோமீட்டரில் தான் முதல் நிறுத்தம். அதேபோல மொத்தம் 21 நிறுத்தங்கள் மட்டுமே இந்த ரயில் பயணத்தில் உள்ளன. இந்த ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வது சற்று கடினமாகவே உள்ளது.