கேர்ள் ஃபிரண்ட் தானே பாய்ஸின் பூஸ்ட் அல்லவா : ஊரு முழுக்க பேனர் வைத்து வைரலான இளைஞர் !

london advertisement billboard
By Irumporai Jan 06, 2022 11:07 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

 பிரிட்டனில் உள்ள 29 வயது இளைஞர் ஒருவர், தனக்கு ’மணமகள் தேவை’ என்ற விளம்பரத்திற்காக இணையதளம் தொடங்கி சாலையோரமாக விளம்பரப்பலகையே வைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது

பிரிட்டன் பிர்மிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது மாலிக். பெற்றோர்களால் நிச்சயயிக்கப்படும் திருமணம் மீது ஆர்வம் இல்லாத அவர், பிர்மிங்கம் பகுதியின் முக்கிய சாலைகளில் 20 அடி நீளத்திற்கு பெரிய விளம்பரப் பலகைகளை வைத்திருக்கிறார்.

அதில், “என்னை Arranged Marriage-ல் இருந்து காப்பாற்றவும். findMALIKawife.com” என்ற இணையதளத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதில், இணையதளத்திற்கு சென்று பார்த்தால் முகமது மாலிக் பற்றிய முழு விவரமும் தெரிந்துவிடும். “இது வேடிக்கை அல்ல. உண்மையாகவே நான் எனக்கான ஒரு மணமகளை தேடி கொண்டிருக்கிறேன்” என்ற வாசகங்களோடு வரவேற்கிறது அந்த இணையதளத்தின் முகப்பு பகுதி.

அதனை தொடர்ந்து, மாலிக் குறித்த சுய விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, அவர் எதிர்ப்பார்க்கும் மணமகள் பற்றிய விருப்பங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். விளம்பரத்தையும், இணையதளத்தையும் பார்த்து நிறைய பேர்தொடர்பு கொண்டதாக மாலிக் தெரிவித்திருக்கிறார்.

மாலிக்கின் விளம்பரப்பலகையினை பார்த்த  90ஸ் கிட்ஸ்கள் சும்மா இல்லாமல் இந்த விளம்பரப்பலகை செய்தியை அதிகம் பகிர்ந்து மீம்ஸ்களும், கமெண்ட்ஸ்களையும் பதிவிட்டு  வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர்.