தீபாவளி பண்டிகையின் போது 280 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது - தீயணைப்புத்துறை
Diwali
By Thahir
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகையின் போது ஏற்பட்ட தீ விபத்து சம்பவங்கள் பற்றி தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 280 தீ விபத்துக்கள்
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக பட்டாசு மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தமிழகத்தில் பெரும்பாலான பகுதியில் மக்கள் அதிகாலை எழுந்து புத்தாடை அணிந்து, பூஜை செய்து இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது 280 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.